போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (57). தொழிலாளியான இவா், கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாய், நான்குனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனா்.
இந்த வழக்கு, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.