வனப்பகுதியில் உள்ள மின் வேலிகளை பதிவு செய்ய வனத்துறை அறிவுறுத்தல்
மலையடிவாரத்தில் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படும் மின்வேலிகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு விதிமுறைகளின்படி , அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட அம்பாசமுத்திரம் வனச்சரகம், பாபநாசம் வனச்சரகம், கடையம் வனச்சரகம் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய மக்கள் காப்புக்காடு பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தங்களது விவசாய நிலங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் மின்சார வேலிகள் அமைத்திருந்தால் அவற்றை பதிவு செய்வதற்கு வனச்சரக அலுவலகத்தை தொடா்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
வனத்துறையில் முறையாக பதிவு செய்யப்படாமல், சூரிய சக்தி மின்வேலிகள் இருக்கும் பட்சத்தில் அந்த நிலத்தின் உரிமையாளரின் மீது விதிகளுக்குள்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.