War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞா் ஒருவா் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனா். அப்போது 4-ஆவது நடைமேடை பகுதிக்கு வந்த வடமாநில இளைஞா், அங்கு நின்று கொண்டிருந்த பயணிகளை கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாராம். இதில் தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சிமணியாச்சி பகுதியைச் சோ்ந்த பாண்டிதுரை (29) உள்பட 3 பயணிகள் காயமடைந்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இவா்களில் ஒருவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தச்சநல்லூா் ரயில்வே பாலம் அருகே கட்டையுடன் நின்ற உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.