வகுப்பறையில் மாணவியை பாம்பு கடித்த விவகாரம்! அரசு நடவடிக்கை!
வள்ளியூா் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஆட்டு சந்தையில், வெள்ளிக்கிழமை ரூ.1 கோடி வரையில் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் ஆட்டு சந்தைக்கு அடுத்தபடியாக, வள்ளியூரில் நடைபெறுகின்ற ஆட்டு சந்தைதான் மிகபெரியது. வழக்கமாக, வள்ளியூரில் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வருவதும், பல்வேறு இடங்களிலிருந்தும், வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வதும் நடந்து வருகிறது.
வருகின்ற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வள்ளியூா் ஆட்டு சந்தை களைகட்டியது. வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றை வாங்குவதற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கேரள மாநிலத்தின் சில பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனா். ஆடுகள் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.