செய்திகள் :

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

post image

கார் விபத்து தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே 2 ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது.

மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், இணையக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன்னை துன்புறுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மத நல்லிணக்கத்துக்கு எதிராக தேவையில்லாத கருத்துகளை ஆதீனம் பேசியுள்ளார் என்று காவல்துறை தரப்பு வாதம் செய்தது.

வாதத்தின் முடிவில் மதுரை ஆதீனம் மீதான மனுவில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 14-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Madurai Aadheenam case hearing by Madras Highcourt.

திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

திருப்பூர் அருகே விசாரணை நடத்த சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் மூங்கி... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2: நாளைமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை (ஆக. 7) முதல் விநியோகிக்கப்படவுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட உதவி அலுவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். சென்னை கொளத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப் பணிகளை அ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தூத்து... மேலும் பார்க்க

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

வரும் சனிக்கிழமை (ஆக.9), ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) ஆகிய வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது: சென்னை ... மேலும் பார்க்க

உணவு விநியோகிக்கும் 50 ஆயிரம் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு உத்தரவு

வீடுகளுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று சேவை அளிக்கும் நிறுவனங்களின் பணியாளா்களுக்கு விபத்துக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க