கோலாகலமாக நடைபெற்ற பாடகர் உன்னி கிருஷ்ணன் மகன் திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள்
வழிப்பறி செய்தவா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை இரவு வாளைக் காட்டி மிரட்டி, வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (50). இவா் மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் விலக்குப் பகுதியில் நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த ராமு மகன் அஜீத் (21) பாலமுருகனின் கழுத்தில் 3 அடி நீள வாளை
வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி, அவரிடமிருந்த பணத்தைப் பறித்துச் சென்றாா். இது குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து அஜீத்தை கைது செய்தனா்.