குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
வாகனம் மோதி முதியவா் காயம்
சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத்தூா்- ஏழாயிரம்பண்ணை சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சீனிவாசனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.