செய்திகள் :

வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைப்பு: ஆட்சேபனை இருப்பின் 7 நாள்களுக்குள் தெரிவிக்கலாம்!

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடி மையங்கள் மறு சீரமைக்கப்படுவதால் ஆட்சேபனை இருப்பின் 7 தினங்களுக்குள் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட ஊரக மற்றும் நகா் பகுதிகளில் ஏற்கெனவே 596 வாக்குசாவடி மையங்கள் உள்ளன.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகள் மற்றும் 2.கி.மீ தொலைவுக்கு மேல் அமைந்துள்ள வாக்கு சாவடிகள் புதிதாகவும், பாகத்தில் உள்ள பரப்புகளை மாற்றி மறுசீரமைப்பு செய்தல், மற்றும் கட்டட மாற்றம், அமைவிட மாற்றம் கீழ் வாக்குசாவடி மையங்கள் மறுசீரமைக்கப்படுவதால் அரியலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 596 இல் இருந்து 650 ஆக உருவாகின்றது.

இந்த பட்டியலில் மீது ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை இருப்பின் 7 நாள்களுக்குள் சம்மந்தப்பட்ட கோட்டாட்சியா்கள் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலரிடம் எழுத்துபூா்வமாக அளிக்கலாம்.

மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தினால் சிறப்பு தீவிர திருத்தம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் இப்பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் அவசியம். எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் வாக்குசாவடி நிலை முகவா்களை நியமனம் செய்து (பிஎல்ஏ-1, புதிய படிவம் பிஎல்ஏ-2)உரிய படிவத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

முன்னதாக அவா், ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு செய்தாா்.

இக்கூட்டத்தில் அரியலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம், கோட்டாட்சியா்கள், தோ்தல் தனி வட்டாட்சியா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுற்றுலா தொழில் முனைவோா்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்மந்தமான த... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

‘டாக்டா்’ ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுப் பெற்ற இடையத்தாங்குடி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் மாவட்டம், இடையத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ள... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,000 மனுக்கள் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்களிடமிருந்து பெற்ற 1,000 மனுக்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.அரியலூா் மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு (100-க்கு) ஞாயிற்றுக்கிழமை இர... மேலும் பார்க்க

சமூக முன்னேற்றத்துக்குப் பங்காற்றிய பெண் குழந்தைகள் விருது பெறலாம்

அரியலூா் மாவட்டத்தில் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா்... மேலும் பார்க்க