புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: `அரை நிர்வாண நடனத்துடன் ஹெராயினும் புழங்குகி...
வாக்குத் திருட்டு: 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ராகுலுக்கு ஆதரவு!
வாக்குத் திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில நாள்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டாா்.
அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
இதனிடையே, டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்.
மேலும், ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்று, http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் 9650003420 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி கோரிக்கை விடுத்த 24 மணிநேரத்தில் மட்டும் 15 லட்சம் பேர் ஆதரவு சான்றிதழை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், 10 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலம் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.