அசைக்க முடியாத இயக்கமாக திமுகவை மாற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் சூளுரை
வாட்ஸ் ஆப் கூட பயன்படுத்தாத ஃபஹத் ஃபாசில்... ஏன்?
நடிகர் ஃபஹத் ஃபாசில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கியவர், தற்போது நடிகர் வடிவேலுவுடன் மாரீசன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் நாளை (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற ஃபஹத் ஃபாசில், “நான் கடந்த ஓராண்டாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதில்லை. சாதாரண பட்டன் செல்போனையே உபயோகிக்கிறேன். இமெயிலில் மட்டும்தான் என்னைத் தொடர்பு கொள்ள முடியும். சமூக வலைதளங்களில் இல்லை. காரணம், என் தனிப்பட்ட வாழ்க்கையையோ புகைப்படங்களையோ பொதுவெளியில் பகிர விருப்பம் இல்லை.
ஒரு நடிகராக ஸ்மார்ஃபோன் எனக்கு முக்கியமானதுதான். ஆனால், வேறு வழிகளும் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், நான் வாட்ஸ் ஆப்பில் கூட இல்லை. இதனால், இன்றைய தலைமுறையினரிடமிருந்து விலக்கம் அடைகிறேனா எனக் கேட்டால், நான் மோசமான படங்களைக் கொடுக்காத வரை விலக்கம் அடைய மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இது தவறு... செய்தி நிறுவனத்தைக் கண்டித்த ஷாந்தனு!