Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு இசையமைப்பாளா் இளையராஜா சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வியாழக்கிழமை வந்தார்.
வாணியம்பாடி தேவஸ்தானம் ஊராட்சியில் உள்ள அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு காரில் வந்த இளையராஜா ஆலயத்தில் உள்ள தனி சன்னதியில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயம், முருகர் ஆலயம் தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
மேலும் சுயம்பு ரூபமாக காட்சியளிக்கும் ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட இளையராஜா பிரகாரத்தை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்தார்.
இசைஞானி இளையராஜா வருவதை அறிந்த அந்த பகுதி மக்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.