ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!
இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்தமுறை 2023ஆம் ஆண்டுக்கான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுக்கான போட்டியில் 332 படங்கள் இடம்பெற்றன.
தமிழில் சிறந்த திரைப்படமாக பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ், கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநராக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், சிறந்த இசையமைப்பாளராக வாத்தி திரைப்படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்படுகிறது. வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ் - சம்யுக்தா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.