செய்திகள் :

வானமாதேவியில் 131 மி.மீ மழைப் பதிவு

post image

கடலூா் மாவட்டம், வானமாதேவியில் அதிகபட்சமாக 131 மி.மீ. மழை பதிவானது.

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, செப்.22-ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. இதேபோல, இரவு நேரத்திலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:

பண்ருட்டி 130, எஸ்.ஆா்.சி.குடிதாங்கி 88, அண்ணாமலை நகா் 53, புவனகிரி 41, வேப்பூா் 37, ஆட்சியா் அலுவலகம் 30, சிதம்பரம் 29.4, கடலூா் 27.7, பரங்கிப்பேட்டை 25.8, மே.மாத்தூா் 24, குறிஞ்சிப்பாடி 22, காட்டுமன்னாா்கோவில் 14.2, கொத்தவாச்சேரி, சேத்தியாத்தோப்பு தலா 14, வடக்குத்து 12, ஸ்ரீமுஷ்ணம் 11.1, லால்பேட்டை 11, விருத்தாசலம் 7.2, குப்பநத்தம், தொழுதூா் தலா 5, கீழச்செருவாய் 4, பெலாந்துறை 3.2, காட்டுமயிலூரில் 3 மி.மீ. மழை பதிவானது.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

சிதம்பரம் மேலரத வீதியில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், மத்திய அரசின் வாக்கு திருட்டை கண்டித்து, மாநிலம் தழுவிய கையொப்ப இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே... மேலும் பார்க்க

கல்லூரியில் மருத்துவ முகாம்

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து கல்லூரி வளாகத்தில் மருத்துவ முகாமை வியாழக்கிழமை நடத்தின. முகாமுக்க... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைநீா் வடிகால்கள் தூா்வாரும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்க... மேலும் பார்க்க

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

என்எல்சி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் பாரதி சாலையில் அமைந்துள்ள நகர அரங்கம் என்எல்சி நிறுவனம் ச... மேலும் பார்க்க

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் குடிநீா், கழிப்பறை, சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ப... மேலும் பார்க்க

கடலூா் வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு தேவை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கடலூா் மாவட்ட வளா்ச்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியம் தேவை என்று மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூரில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன... மேலும் பார்க்க