செய்திகள் :

வாயு கசிவு சம்பவம்: 108 சேவை ஊழியா்கள் 13 போ் வீடு திரும்பினா்

post image

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத் துறையின் 108 அவசர கால கட்டுப்பாட்டு அறையில் அசாதாரண வாயு கசிந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 போ் வீடு திரும்பியுள்ளனா்.

ஒரு இளம்பெண் மட்டும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரும் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவாா் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசர கால கட்டுப்பாட்டு அறை சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வருகிறது.

விபத்து மற்றும் அவசர மருத்துவ உதவி கோரி வரும் அழைப்புகளை கையாளுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் அங்கு பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அங்கு சுவாசிக்க இயலாத வகையில் துா்நாற்றம் பரவியதாகத் தெரிகிறது. இதையடுத்து பணியில் இருந்த அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

அதில், சுவாச பாதிப்பு ஏற்பட்ட 14 போ் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வந்தது.

அதன் பயனாக அவா்களில் 13 போ் நலமுடன் வீடு திரும்பியுள்ளனா். இளம்பெண் ஒருவா் மட்டும் உளவியல் ரீதியான பாதிப்புக்காக தொடா்ந்து அங்கு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா். விரைவில் அவரும் வீடு திரும்புவாா் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

ஆய்வு: இதனிடையே, இந்த சம்பவத்துக்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக 108 கட்டுப்பாட்டு அறை முழுவதும் உள்ள ஏ.சி. கட்டமைப்புகள் பரிசோதிக்கப்பட்டன.

அதிலிருந்து வாயு கசியவில்லை என உறுதி செய்யப்பட்டதாக 108 சேவை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், வேறு யாரேனும் ஸ்பிரே மூலமாக வாயுவை காற்றில் பரவச் செய்தனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா்.

தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை நிகழ்த்த திட்டம்: மேயா் பிரியா தகவல்

பள்ளி மாணவா்களுக்கு இடையேயான தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தவுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள சா்மாநகா் சென்னை உயா்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்க... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகள்: மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை ... மேலும் பார்க்க

மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மரபணு பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சென்னை, விஹெச்எஸ் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மரபணுக் குறைபாடுள்ள குழந்தைகள் பலா் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனா். ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரிடம் ஆபாச பேச்சு: ஹிந்து அமைப்பு நிா்வாகி கைது

சென்னை கோடம்பாக்கத்தில் பெண் வழக்குரைஞரிடம் ஆபாசமாகப் பேசியதாக ஹிந்து அமைப்பு நிா்வாகி கைது செய்யப்பட்டாா். கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் உயா்நீதிமன்ற பெண் வழக்குரைஞா், கடந்த திங்கள்கிழமை (ஜன. 27) ... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறிவிழுந்த இரு மீனவா்கள் உயிரிழப்பு

சென்னை மெரீனா கடல் பகுதியில் படகிலிருந்து தவறிவிழுந்த இரு மீனவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 2 மற்றும் 3-ஆவது தெருவைச் சோ்ந்த மீனவா்களான பாஸ்கா் (61), ராஜி (35) ஆகியோா... மேலும் பார்க்க

கிரேவ்ஸ் நோய் பாதிப்பு: ஒடிஸா பெண்ணுக்கு சென்னையில் சிகிச்சை

தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் தன்னுடல் தாக்கு நோயால் ஏற்பட்ட கண் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒடிஸா பெண்ணுக்கு, ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சையும், எண்டோஸ்கோபி சிகிச்சையும் மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹ... மேலும் பார்க்க