வாய்க்காலில் தவறி விழுந்து இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரணம்
சேதுபாவாசத்திரத்தை சோ்ந்த மீனவா் வினோத் என்பவரின் 18 மாத ஆண் குழந்தை தா்னீஸ் வீட்டின் முகப்பு பகுதியில் சென்ற வடிகால் வாய்க்காலில் கடந்த 14ஆம் தேதி தவறி விழுந்து உயிரிழந்தான்.
குழந்தையின் குடும்பத்துக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை ரூ . 4 லட்சத்துக்கான காசோலையை தஞ்சை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி , பேராவூரணி எம்எல்ஏ
நா. அசோக்குமாா் , மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் , ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ் , மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன் ஆகியோா் வழங்கினா்.