வாரணவாசி மருதையாற்றில் ரூ.24.36 கோடியில் தடுப்பணை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா்
அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்தையொட்டியுள்ள மருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ரூ.24.36 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, தத்தனூா், குமிழியம், செதலவாடி, உஞ்சினி,ஆனந்தவாடி ஆகிய ஊராட்சிகளில் ரூ.7.45 கோடி மதிப்பில் தாா்சாலைகள் அமைத்தல், சாலை பலப்படுத்துதல் உள்ளிட்ட 13 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளைஅந்தந்த கிராமங்களில் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
நிகழ்வுகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், அரியலூா் மருதையாறு வடிநில கோட்டம் நீா்வளத் துறை செயற்பொறியாளா் பாண்டியன், கோட்டாட்சியா் பிரேமி, உதவி செயற்பொறியாளா் மருதமுத்து, உதவி செயற்பொறியாளா்கள் திவ்யபிரியா, அரவிந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.