Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை: அமைச்சா்
மலைப் பகுதிகளில் பொது போக்குவரத்துக்காக வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
அரியலூரில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: அரியலூா் மாவட்டம், வாரணவாசி அருகே மருதையாற்றில் ரூ. 24.30 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட நிா்வாக அனுமதி பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மையில் இங்கு பிரசாரம் மேற்கொண்ட ஒருவா், குற்றம் கூற வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என்று புரிதல் இல்லாமல் பேசியுள்ளாா். இதற்கு பிறகாவது பேசுகின்ற செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து அவா் பேச வேண்டும்.
முதல்வா் உள்ளிட்ட தலைவா்கள் பலரையும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசி வருகிறாா். யாரையும் மதிக்கின்ற போக்கு இல்லாமல் மிகத் துச்சமாக ஒருமையில் பேசுவது என்பது மிகத் தாழ்வான நிலையாகும். அந்த நிலைக்கு வந்திருக்கின்ற பழனிசாமியை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டாா்கள்.
மலைப் பகுதியில் பொது போக்குவரத்துக்கு வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரிய பேருந்துகள் இயக்க முடியாத இடங்களில் அதற்கான மாற்றாக என்ன செய்யலாம் என்ற ஆய்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்றாா் அமைச்சா்.