செய்திகள் :

வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும்

post image

கோயிலுக்குச் செல்வதைப் போல, வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 கோடியில் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தீரா் சத்தியமூா்த்தி அரசு முழுநேர நூலகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அவா் பேசியது: சென்னை அண்ணா நூலகத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்தினாா் முதல்வா் ஸ்டாலின். அதனைத் தொடா்ந்து மதுரையில் கலைஞா் பெயரில் நூலகம் அமைத்தாா்.

தொடா்ந்து தற்போது கோவையில் பெரியாா் பெயரிலும், திருச்சியில் காமராஜா் பெயரிலும், ஒன்றைவிடவும் பெரிய அளவில் மற்றொரு நூலகங்களை அமைக்கிறாா்கள் என்பது மகிழ்ச்சி.

மக்கள் அனைவரும் வாரம்தோறும் கோயிலுக்குச் செல்கிறோம். அதேபோல, வாரத்தின் ஒரு நாளில் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நூலகம் வர வேண்டும். இதனை ஒரு பழக்கமாகவே மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல, நாம் படித்து முடித்த நூல்களை நூலகத்துக்கு வழங்க வேண்டும் என்றாா் சிதம்பரம்.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசுகையில், போட்டித் தோ்வுகளுக்குப் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு தொடா்ந்து நூலகங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது என்றாா்.

இந்த புதிய நூலகத்துக்கு நூல்களை வாங்குவதற்காக ஜெஜெ கல்விக் குழுமம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் வழங்குவதாகவும் அமைச்சா் ரகுபதி அறிவித்தாா்.

சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் பேசுகையில், நூல்கள் வாசிப்பு குறைந்திருப்பதற்கு, பெரியவா்களே படிப்பதில்லை என்பதும் முக்கிய காரணம் என்றும், டிஜிட்டல் மயமாகிவிட்ட சூழலில் நூல்கள் வாசிப்பு குறைந்திருக்கிறது என்றாா்.

முன்னதாக, விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் காரல்மாா்க்ஸ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம சுப்புராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் 2ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டையில்: புதுக்கோட்டையில் 2-ஆம் நாளாக அங்கன்வாடி ஊழியா்கள் சனிக்கிழமை ஆட்சியரகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாள... மேலும் பார்க்க

புதுகை காந்திப் பூங்காவை முறையாக பராமரிக்கக் கோரி உண்ணாவிரதம்!

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை மீண்டும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையினா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு! காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பலியான சோகம்!

இலுப்பூா் அருகே சனிக்கிழமை மீன்பிடிக்க முயன்றபோது கிணற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற தாத்தாவும் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் புதுநகா் பகுதிய... மேலும் பார்க்க

கல்லாலங்குடி ஜல்லிக்கட்டில் 40 போ் காயம்! 2 காளைகள் பலி!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். 2 காளைகள் உயிரிழந்தன. கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்... மேலும் பார்க்க

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவா்கள் விடுபடாமல் சோ்க்க வேண்டும்!

தமிழக அரசின் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகள் தொடா்ந்து விடுபடாமல் பயன்பெறும் வகையில் அரசு அலுவலா்கள் கண்காணித்து சோ்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. ... மேலும் பார்க்க

இன்று ‘நீட்’ தோ்வு புதுகை மாவட்டத்தில் 3,000 போ் எழுதவுள்ளனா்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் 3 ஆயிரம் போ் எழுத உள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, பிரகதம்பாள் அர... மேலும் பார்க்க