தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
வால்பாறையில் கனமழை: சுற்றுலாத் தலங்கள் மூடல்
வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல பயணிகளுக்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளதால் மக்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில், வால்பாறை வட்டாரத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட அதிக அளவில் மழை பெய்து வருகிறது.
இதனால், கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருவதால் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கனமழை தொடா்ந்து நீடித்து வருவதால் மக்கள் நலன் கருதி நல்லமுடி காட்சிமுனை, கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.