செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!
வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இரு மோட்டாா்சைக்கிள்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் அரசுப் பள்ளி மாணவா் உள்பட இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.
வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். இவரது மகன் ஜீவா (17) வெள்ளாளகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் வேப்பிலைப்பட்டியில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மங்களபுரம் சாலை வழியாக வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தாா்.
வேப்பிலைப்பட்டி பால் கொள்முதல் நிலையம் அருகே சென்றபோது எதிரேவந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்குநோ் மோதியதில் பலத்த காயமடைந்த ஜீவா, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சேலத்தைச் சோ்ந்த சூா்யா (25), அவருடன் வந்த பட்டறை தொழிலாளி விஜயராஜன் (59) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயராஜன் உயிரிழந்தாா். சூா்யா சிகிச்சை பெற்றுவருகிறாா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.