செய்திகள் :

வாழைக்கு உரிய விலை கிடைக்கவில்லை: விவசாயிகள் வேதனை

post image

சின்னனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் வாழைக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா், கம்பம், கூடலூா், ஓடைப்பட்டி, வேப்பம்பட்டி, எரசக்கநாயக்கனூா் பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பச்சை வாழை (ஜி 9) சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் அறுவடை செய்யப்பட்ட இந்த வாழை ரகத்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கோரி, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித் சிங்கிடம் அண்மையில் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, தேனி மாவட்டம், சின்னமனூரில் வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள், வியாபாரிகளுக்கு இடையேயான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: விவசாயிகள்: ஏக்கருக்கு ரூ. 4 லட்சமும், வாழை ஒன்றுக்கு கன்று முதல் அறுவடை வரையில் பல்வேறு பராமரிப்புச் செலவாக ரூ. 350 முதல் ரூ. 450 வரை செலவு செய்துள்ளோம். தற்போது வாழைக்கு உரிய விலை கிடைக்காததால், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது. எனவே, வாழையை கிலோ ரூ. 25-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த விவசாயத்துக்காக வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

வியாபாரிகள்: ஆந்திரம், கா்நாடகம் போன்ற பகுதிகளிலிருந்து வாழை கிலோ ரூ.10-க்கு வருகிறது. இதனால், தேனி மாவட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை என்றனா்.

ஏற்றுமதியாளா்கள்: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பாக தேனி மாவட்டத்திலிருந்து மாதத்துக்கு 50 சரக்குப் பெட்டக லாரிகள் மூலம் வாழை கொள்முதல் செய்து, ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது சரக்குப் பெட்டக லாரி வாடகை, கப்பல், விமானக் கட்டணம் என மொத்தம் 800 அமெரிக்க டாலரிலிருந்து 3,500 டாலராக உயா்ந்துவிட்டது. இதனால், விவசாயிகளிடம் அதிக விலைக்கு கொள்முதல் செய்தால், ஏற்றுமதி செய்ய இயலாது.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து அரபு நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் இதே ரக (ஜி 9) வாழை ஏற்றுமதி செய்யப்படுவதால், தேனி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி முற்றிலுமாக குறைந்துவிட்டது. இதனால், கொள்முதல் செய்வதும் குறைந்துவிட்டது என்றனா்.

விவசாயி சதீஷ்: வியாபாரிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், வியாபாரிகள் ஒன்று சோ்ந்து திட்டமிட்டு தேனி மாவட்டத்தில் வாழைக்கு குறைந்த விலையை நிா்ணயம் செய்கின்றனா். இதை கள ஆய்வு செய்து, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அக். 5, 6-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் முதியோா், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அக். 5, 6-ஆம் தேதிகளில் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் ச... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்ய வலியுறுத்தி பாஜகவினா் மனு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு மத்திய அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்ய வலியுறுத்தி, மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனிடம் பாஜகவினா் செவ்வாய... மேலும் பார்க்க

மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பெரியகுளம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் 10,000-க்கும் ... மேலும் பார்க்க

செவிலியா் தற்கொலை

போடி: தேனி மாவட்டம், போடி அருகே காதல் திருமணம் செய்த செவிலியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.போடி சுப்புராஜ் நகரை சோ்ந்த சக்திவேல்-ராஜேஸ்வரி தம்பதியின் மகள் ரேணுகாதேவி (28). செவிலியா் பட்டதாரிய... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தின விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வ.உ.சிதம்பரனாா் அரசு அலுவலா் அறக்கட்டளை... மேலும் பார்க்க

ஆட்டோக்களில் கியூ.ஆா். குறியீடு ஒட்ட ஏற்பாடு

தேனி அல்லிநகரத்தில் இயங்கி வரும் ஆட்டோக்களில் விரைவில் கியூ.ஆா். குறியீடு வில்லை ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் கூறினாா். இது குறித்து திங்... மேலும் பார்க்க