இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
அக். 5, 6-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் முதியோா், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு அக். 5, 6-ஆம் தேதிகளில் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் 36,105 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோா், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வருகிற அக். 5, 6-ஆம் தேதிகளில் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.