செய்திகள் :

வாழ்த்துங்களேன்!

post image

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.

7.1.25 முதல் 20.1.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 31.12.24

மங்கல வாழ்வு தரும் ஸ்ரீமயிலாடி முருகன்

மங்கல வாழ்வு தரும் ஸ்ரீமயிலாடி முருகன் ஆலயத்தில்...

7.12.25 முதல் 20.1.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைகள், சீர்காழி அருகிலுள்ள மயிலாடி முருகன் ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

சிதம்பரம் - சீர்காழி பிரதான சாலையில், புத்தூருக்கு அருகிலுள்ள கிராமம் மயிலாடி. இங்குள்ள ஸ்ரீபிருஹன்நாயகி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் தொன்மையானது. அம்பிகை மயில் உருக்கொண்டு ஆடிய தலம் இது. முருகப்பெருமான் அசுர மயிலுடன் காட்சி தரும் அபூர்வ தலங்களில் இதுவும் ஒன்று. யோக நிலையில் பாலசுப்பிரமணியராக காட்சி தருகிறார், மயிலாடி முருகன். இவரை வணங்கினால் எதிர்ப்புகளும் தோஷங்களும் நீங்கும். நீண்ட ஆயுள், நீங்காத செல்வம், நிலைத்த ஆரோக்கியம் என அனைத்தும் அருளும் அற்புதமான இந்தத் தலத்தில்... வாசகர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிட வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

சபரிமலையில் வரும் 26-ம் தேதி மண்டல பூஜை பக்தர்களுக்கு கட்டுப்பாடு அறிவித்த தேவசம்போர்டு

திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வரும் 26-ம் தேதி மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். தந்தி கண... மேலும் பார்க்க

நிகும்பலா ஹோமம்: 48 நாள்களுக்குள் உங்கள் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் மகாகாளி குங்குமம்

2025 ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. மேலவல்லம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் மகா நிகும்பலா ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தால் தீமைகள் யாவும் விலகி... மேலும் பார்க்க

சபரிமலை: ``பெருவழிப்பாதையில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு நேரடி தரிசனம்'' -தேவசம்போர்டு சொல்வதென்ன?

சபரிமலை செல்லும் பக்தர்கள் நேரடியாக பம்பா வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் நீலி மலை வழியாக சன்னிதானம் செல்வார்கள். பெரும்பாலான பக்தர்கள் இந்த எளிய வழியை பயன்படுத்துவார்கள். ... மேலும் பார்க்க

108 திவ்ய தேசங்கள் | Part 2 | உறையூர் - பங்குனி உற்சவ சிறப்புகள் | RAMYA VASUDEVAN | 108 Divya Desam

108 திவ்ய தேசங்களில் இரண்டாவது திவ்ய தேசம் உறையூர். இந்தத் திருத்தலம் குறித்த அற்புதங்களை விளக்குகிறார் ரம்யா வாசுதேவன். மேலும் பார்க்க

108 திவ்ய தேசங்கள் | Part 1 | ஸ்ரீரங்கம் திருக்கோயில் மகிமைகள் | RAMYA VASUDEVAN | 108 Divya Desam

108 திவ்ய தேசங்களின் மகத்துவத்தையும், அவற்றின் வரலாற்று, கலாச்சார மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தையும் விளக்கும் இந்த வீடியோ தொடர் மலர்கிறது. மேலும் பார்க்க

லட்சத்தீபம்,சொக்கப்பனை... தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட்சத்தீபம்லட... மேலும் பார்க்க