வா வாத்தியார் என்ன ஆனது?
நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வெளியீட்டிற்குத் தாமதமாகி வருகிறது.
கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமானது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்களின் பழைய நினைவுகளாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.
தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு ‘வா வாத்தியார்’ எனப் பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிக்க: இட்லி கடை வெளியீட்டில் மாற்றம்?
இப்படத்தில் நாயகியாக கிருத்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் ராஜ்கிரணும் நடித்துள்ளனர். பொங்கல் வெளியீடாக இந்தாண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவிருந்தது. பின், பிப்ரவரி வெளியீடாகத் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதே படத்தின் தாமதத்திற்கான காரணம் கூறப்படுகிறது. இதனால், இப்படம் மார்ச் வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.