திண்டுக்கல்: '112 அடி கிணற்றைக் காணவில்லை'- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
விகடன் தந்த தாய் மாமன் சீர்! - ஒரு நெகிழ்வனுபவம் | #நானும்விகடனும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஆகஸ்ட் , 2008.
இப்போது போன்று ஆண்ட்ராய்டு,ஸ்மார்ட்போன் என்று வகைவகையாக இல்லாமல் சாதாரணமாக கையடக்க பட்டன் போன் பயன்படுத்தினாலே பணக்காரர் என்ற நினைப்பில் மிதந்த காலம் . அதே போன்று வாட்ஸ் அப், இன்ஸ்டா , ட்விட்டர் தோன்றாத பட்டன் போன் காலகட்டத்தில் SMS மட்டுமே பிரபலம் .
ஆகஸ்ட் , 2008. காலகட்டங்களில் ஜூனியர் விகடனில் டிஜிக்கு , ஜோக்கு கலக்கு என்று வாசகர்களுக்கு இரண்டு போட்டிகளை தொடர்ந்து அறிவித்தார்கள்.
ஜோக்கு கலக்கு பகுதிக்கு ஓவியம் ஒன்றுடன் முதல் வரியை எழுதி விட்டு , மீதியை வாசகர்களை தமிங்கிலீஷில் டைப் அடித்து அனுப்ப வேண்டும் . அதே மாதிரி டிஜிக்கு பகுதிக்கு போட்டோ ஒன்றை வெளியிட்டு , பொருத்தமான காமெடி கமெண்ட் எழுத வேண்டும்.

இதில் ஆச்சர்யம் என்னெவென்றால் , பிரசுரமாகும் ஒவ்வொரு காமெண்ட்க்கும் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கினார்கள்
இந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்று கிட்டத்தட்ட 12 கிராம் தங்க நாணயம் வரை பரிசாக பெற்றேன் . பரிசாக கிடைத்த தங்க நாணயங்களை பெறுவதற்காக விகடன் அலுவலகத்திற்கு பல முறை சென்று நேரில் வாங்கி வந்தேன் . அனைத்து தங்க நாணயங்களையும் ஞாபகமாக அப்படியே வைத்திருந்தேன்.
மே 2017
சுமார் 9 ஆண்டுகள் கழித்து என்னுடைய மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவின் போது புதியதாக நகை வாங்க வேண்டிய கட்டாயம் .பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வளவு நாட்கள் நினைவாக வைத்திருந்த விகடன் முத்திரை பதித்த நாணயங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது .

நகை கடையில் விகடன் முத்திரை பதித்த இந்த நாணயங்களை கொடுத்து புதிய நகை வாங்கும்போது , எங்களுக்கு நகைகளை காட்டிய விற்பனை பிரதிநிதியான பெண்மணி ,சார்.. இது விகடன்ல ஜெயிச்ச தங்க காசு போன்று இருக்கிறதே ,, இதை போய் ஏன் சார் மாத்துறீங்க என்று ஆச்சர்யமாக கேட்டார் ..
இல்லீங்க மா .. இது எம்பொண்ணுக்கு விகடன் கொடுத்த தாய் மாமன் சீர் என்று அந்த நேரத்திற்கு சமாளித்து விட்டு புதிய நகை வாங்கி வந்து விட்டோம் . என்னுள் விகடன் முத்திரை பதித்த தங்க நாணயங்களை மாற்றி விட்டோமே என்று வருத்தம் இருந்தாலும் சூழ் நிலை கருதி என்னை நானே சமாளித்துக் கொண்டேன் .
விகடன் என் மகள் மஞ்சள் நீராட்டுவிழாவிற்கு அனுப்பிய சீர் ஆக நினைக்கும் அந்த நகை இன்னமும் இருக்கிறது. இப்படி எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை என்னால் பகிர முடியும்.. பகிரத் தான் போகிறேன்!
விகடன் வேறு யாருமில்லை .. நம்மில் ஒருவர் .. நமக்கான ஒருவர் !
- பூநசி.மேதாவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!