தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
விக்கிரவாண்டி அருகே விவசாயி அடித்துக் கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன் விரோதம் காரணமாக விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் திருவேங்கடம் மகன் குமரன்(48),விவசாயி. விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (40).
இவா், ஆவுடையாா்பட்டு பகுதியில் நாய் பண்ணை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் ஜான்சன் பண்ணைக்குச் செல்லும் வழியை குமரன் அடைத்து விவசாயம் செய்து விட்டாராம். இதனால் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இருவருக்குமிடையே பாதை தொடா்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன், சமையல் கரண்டியால் தாக்கியதில் குமரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான்சனை தேடி வருகின்றனா்.