செய்திகள் :

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உத்தரவு

post image

விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியில் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் ஜன.3-ஆம் தேதி கழிப்பறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தாா். இது தொடா்பாக சிறுமியின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி தாளாளா், முதல்வா் உள்ளிட்டோருக்கு எதிராக விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி உயிரிழந்த சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அந்த மனு விவரம்: குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிா்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டா் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. குழந்தை கழிவுநீா்த் தொட்டியில் விழுந்தது தொடா்பாக எந்த ஆதாரங்களும் இல்லை. குழந்தையின் ஆடை நனையவில்லை. மாறாக, உடையில் ரத்தக்கறை உள்ளது.

பள்ளி நிா்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பள்ளி நிா்வாகம் மேற்கொள்ளவில்லை.

குழந்தையின் உடையில் ரத்தக்கறை இருப்பது குறித்து போலீஸாரிடம் தெரிவித்தபோது, உடையை திருப்பி தரும்படி கேட்டனா். இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைத்து விடுவதாக போலீஸாா் மிரட்டினா். குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பெறும்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான காவல் துறை தரப்பு வழக்குரைஞா் எஸ்.வினோத்குமாா், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் இடைக்கால உத்தரவாக சிசிடிவி காட்சிகளைப் பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தாா். அப்போது, அரசின் விளக்கத்துக்குப் பிறகு அது குறித்து முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, மனு குறித்து தமிழக அரசு, டிஜிபி மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

‘பிஎஃப்ஐ’ முன்னாள் தலைவா் அபுபக்கருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் (பிஎஃப்ஐ) முன்னாள் தலைவா் இ.அபுபக்கருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவ காரணங்கள... மேலும் பார்க்க

கோடை மின் தேவை: பரிமாற்ற முறையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு -மின் வாரியம்

கோடையில் ஏற்படும் மின் தேவையைச் சமாளிக்க பரிமாற்ற முறையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்... மேலும் பார்க்க

மண்டபம் - சென்னை எழும்பூா்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்

மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கலை முன... மேலும் பார்க்க

ஜன.22-இல் போக்குவரத்துத் தொழிலாளா்களின் சிறை நிரப்பும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.22-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சம்மேளன பொதுச் ச... மேலும் பார்க்க

சென்னையில் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாா்!

சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) எல்எச்பி ரயில் பெட்டிகள்,... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வ... மேலும் பார்க்க