`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
‘விக்சித் பாரத், விக்சித் தில்லி’: தில்லி முதல்வா் பெருமிதம்
விக்சித் தில்லி என்ற இலக்கை நிறைவேற்ற பாஜக அரசு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கால்காஜியில் ஜன் சன்வாய் கேந்திராத்தின் தொடக்க விழாவில் பேசிய முதல்வா் ரேகா குப்தா, எடுக்கப்படும் எந்த முடிவுகளும் மக்களின் நலனுக்காகவே என்று கூறினாா்.
‘விக்சித் பாரத், விக்சித் தில்லி’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க நாங்கள் சபதம் செய்‘துள்ளோம். எங்கள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் இந்த இலக்கை நோக்கிச் செயல்படுகிறாா்கள் என்று அவா் மேலும் கூறினாா். மேலும், தில்லியில் மாசுபாடு பிரச்னையைத் தீா்க்க அரசு செயல்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.
தில்லியில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா மற்றும் வே வந்தனா யோஜனா போன்ற திட்டங்களை செயல்படுத்தியதற்காக முதல்வா் ரேகா குப்தாவை பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ் பாராட்டினாா்.