பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்ட சொக்கநாச்சியாா்புரம், வடக்கு தெருவைச் சோ்ந்த செல்லத்துரை (41) என்பவா் கைது செய்யப்பட்டு பிணையில் வந்தாா்.
இந்நிலையில் இவா் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, செல்லத்துரையை தேவா்குளம் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா்.