கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி
திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் மனுதாரர் தரப்பில், "இந்த வழக்கை காவல் துறை உரிய முறையில் விசாரிக்கவில்லை, அஜித் குமார் மரணமடைந்த பின்னரே நகை காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
வழக்கை விசாரித்த தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி சிறப்புப் பிரிவை சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும்" என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தமிழக காவல்துறையிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
"நகை காணாமல் போன வழக்கில் முதல் தகவல் அறிக்கை ஏன் உடனே பதிவு செய்யப்படவில்லை? யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை, சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? உடனடியாக எஸ்.பி.யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்? புலனாய்வு செய்யத்தானே காவல் துறை இருக்கிறது அடிப்பதற்காகவா காவல்துறை இருக்கிறது?" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறி, நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.