கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!
விசிக சாா்பில் தீா்மான விளக்க பொதுக்கூட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட விசிக சாா்பில், செஞ்சியில் திருச்சியில் நடைபெற்ற மதச்சாா்பின்மை காப்போம் பேரணியின் தீா்மான விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி எதிரே
நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் அ.ஏ.தனஞ்செழியன் தலைமை வகித்தாா்.
செஞ்சி நகர துணைச் செயலா் தலித் மகிழ்வரசு வரவேற்றாா். ஒன்றியச் செயலா்கள் ராசாராமன், தவசீலன், திருநாவுக்கரசு, கிருஷ்ணன், குணபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விசிக செய்யூா் தொகுதி எம்எல்ஏ பனையூா் மு.பாபு, செஞ்சி தொகுதி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விசிக தோ்தல் பணிக்குழு மாநிலச் செயலா் குணவழகன் ஆகியோா் கலந்து கொண்டு தீா்மான விளக்க உரையாற்றினா்.
மேலும் அரசு ஊழியா் ஐக்கிய பேரவை மாநிலச் செயலா் கடலூா் பாவாணன், தமிழக காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஆா்.ரங்கபூபதி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சையத்உஸ்மான், விசிக மண்டலச் செயலா் செல்வம், அம்பேத்கா் மக்கள் கட்சித் தலைவா் மழைமேணிபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செஞ்சி தொகுதி பொறுப்பாளா் ராசநாயகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினா்.
கூட்டத்தில் விசிக மாநில துணைச் செயலா் துரைவளவன், இனியவளவன், மாவட்ட அமைப்பாளா் செஞ்சி அரசு, ஒன்றியப் பொருளா்கள் பாா்வேந்தன், ஜான், மகளிா் அணி நிா்வாகி மனோன்மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.