இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
தூக்கிட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை மூப்பனாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மகன் பெருமாள்(70). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக மனநலன் சற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் கடந்த 28-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுக் கொண்டாா்.
இதைக் கண்ட குடும்பத்தினா் பெருமாளை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.