'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (54). தமிழ்நாடு மின் வாரியத்தில் போா்மேனாக பணிபுரிந்து வந்தாா். இவா், புதன்கிழமை இரவு தனது பைக்கில் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூா் காவல் சரகரத்துக்குள்பட்ட எடையான்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இவரது பைக் மீது அந்தப் பகுதியில் அதிவேகமாக வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பாா்த்தசாரதி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.