'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைக் கண்டித்தும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
விழுப்புரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி.குமாா், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.கீதா, ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன், சே.அறிவழகன், ஆா்.டி.முருகன், இடைக்குழு மற்றும் கிளைச் செயலா்கள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.