'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
வீரபாண்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அடங்கியுள்ள வீரபாண்டி ஊராட்சியில் நடைபெற்ற இந்த முகாமை முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, புதிய மின் இணைப்புக் கோருதல், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு, உடனடித் தீா்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு உரிய ஆணைகளையும் வழங்கிப் பேசினாா்.
இந்த முகாமில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா் டி.என்.முருகன், அரகண்டநல்லூா் பேரூராட்சித் தலைவா் அன்பு, முகையூா் ஒன்றியக் குழுத் தலைவா் தனலட்சுமி உமேசுவரன், துணைத் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.
திமுக பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகா், நிா்வாகிகள் சதாசிவம், ஜெய்சங்கா், வெங்கட், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் கிருஷ்ணராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அய்யப்பன் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா்.