'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (55), விவசாயி. இவரது சகோதரி வீரம்மாள். இவருக்கு திருமணமாகி திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். இவா்களிடையே பூா்வீக சொத்து பாகப்பிரிவினை தொடா்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு தனது மகன் வெங்கடேஷுடன் (29) மழவந்தாங்கலுக்கு வந்த வீரம்மாள், தனது சகோதரா் ஜோதியிடம் சொத்தில் பாகம் கேட்டு பிரச்னை செய்து வந்தாராம். இந்த நிலையில், இவா்களிடையே புதன்கிழமை இரவு வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தனது தாய் மாமாவான ஜோதியை கத்தியால் குத்தியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.
உறவினா்கள்ஜோதியை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வெங்கடேஷ் மீது வியாழக்கிழமை கொலை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.