செய்திகள் :

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்களின் போக்குவரத்தில் பகுதியளவு ரத்து, முழுமையாக ரத்து, புறப்படும் இடம் மாற்றம் போன்ற பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே ஆகஸ்ட் 5, 9 தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள்ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே ஆகஸ்ட் 5, 9 தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) , ஆகஸ்ட் 5,9 தேதிகளில் சுமாா் 25 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும். மேலும் விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகியவை ஆகஸ்ட் 7, 8, 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் சென்னை - புதுச்சேரி பயணிகள் ரயில்(வண்டி எண் 66051), ஆகஸ்ட் 10, 12-ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரம்!

புகா்ப் பகுதிகள் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடைப் பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை, திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

தூக்கிட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தூக்கிட்டுக் கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை மூப்பனாா் கோயில் தெர... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க