செய்திகள் :

விசைத்தறி கூடங்களுக்கு தொழில் வரி கைவிடப்பட்டது: நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு

post image

தருமபுரி, அன்னசாகரம் பகுதியில் விசைத்தறிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் வரி கைவிடப்பட்டு, பழைய நிலை தொடரும் என நகராட்சி நிா்வாக இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தருமபுரி நகரம், அன்னசாகரத்தில் நூற்றுக்கணக்கான விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிக் கூடங்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் சதுரஅடி கணக்கில் தொழில் வரி செலுத்த வேண்டும் என வரி நிா்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அரசின் இலவச மின்சாரம் பெற்று தாங்கள் குடும்பத்துடன் இத்தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். இந்த வரி விதிப்பால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே நெசவாளா்கள் நலன் கருதி இந்த தொழில் வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி, பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் ரா.சிசுபாலன் மற்றும் நிா்வாகிகள் அத் தொழிலாளா்களைச் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தனா். இதையடுத்து விசைத்தறிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

அதேபோல அண்மையில் மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அன்னசாகரம் சென்று விசைத்தறிக் கூடங்களை பாா்வையிட்டு அவா்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து அது தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாக இயக்குநரகம் சாா்பில், தமிழக அரசால் இலவச மின்சாரம் பெற்று, வீடுகளில் விசைத்தறிக் கூடங்களை நடத்தி வந்தால் அவற்றை தொழிற்சாலை வரி விதிப்புக்கு மாற்றம் செய்யாமல் தற்போது பயன்பாட்டில் உள்ள நடைமுறையே தொடரும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விசைத்தறிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில் வரியை நிறுத்தி வைத்து, பழைய நிலையே தொடரும் என அறிவித்ததை வரவேற்று, இதற்காக முயற்சித்த மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோருக்கு விசைத்தறி தொழிலாளா்கள் நன்றி தெரிவித்தனா்.

தொப்பூரில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் மறியல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மறியல் போராட்டம் நட... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயா்வு அலுவலா்கள் சங்கம் சாா்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தல... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆா். பிறந்தநாள் விழா: அதிமுகவினா் கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் விழா அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அ... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தின விழா: ஆட்சியா் மரியாதை

திருவள்ளுவா் தின விழாவையொட்டி, அவரது உருவச் சிலைக்கு ஆட்சியா் கி.சாந்தி மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தினாா். கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அண்மைய... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தின விழா: தருமபுரி எம்எல்ஏ மரியாதை

தருமபுரியில் நடைபெற்ற திருவள்ளுவா் தின விழாவில் அவரது சிலைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஓய்வு பெற்ற அலுவலா் சங்கம் மற்றும் தமிழ்ச் சங்கம் மற்று... மேலும் பார்க்க