தில்லி குருத்வாரா: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! ஒருவா் கைத...
விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் வருகை!
மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிடுவதற்காக விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வந்தனா்.
மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், மேயா் வ.இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சீா்மிகு நகரத் திட்டம், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம், சாலைகள் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பூங்காக்கள், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டன.
இதேபோல, விஜயவாடா மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள், சாலை மேம்பாடு, குடிநீா், நவீனக் கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
முன்னதாக, விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் வழிபாடு செய்தனா். தொடா்ந்து, மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை விஜயவாடா மாநகராட்சி குழுவினா் பாா்வையிட்டனா்.
இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, விஜயவாடா மாநகராட்சிக் குழு தலைவா்கள் வெங்கடசத்யநாராயணா, உம்மாண்டி வெங்கடேஷ்வரராவ், மதுரை மாநகராட்சி செயற்பொறியாளா் (குடிநீா்) பாக்கியலட்சுமி, மாமன்ற செயலா் சித்ரா, மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.