What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
``விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம்'' - இந்திய முஸ்லிம் ஜமாத் அறிவிப்பு; காரணம் என்ன?
தவெக தலைவர் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும், விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்கவேண்டும் என்றும் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி தெரிவித்திருக்கிறார்.

கடந்த மார்ச் 7-ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துக்கொண்டு நோன்பு திறந்து வைத்தார். இந்நிலையில், அகில இந்திய முஸ்லீம் ஜமாத் அமைப்பின் தலைவர் விஜய்க்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் , “முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் ஏமாற்று வேலைகளைச் செய்கிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இருக்கும் விஜய், தனது சினிமா பிரபலத்தை அரசியலுக்கு பயன்படுத்த முயல்கிறார்.

திரைத்துறைப் பயணத்தில் தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர் விஜய். இதனால், அவரோடு இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம்.
சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்திப்படுத்தி விட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்துவந்து அதனை அவமதித்து பாவம் செய்துவிட்டார்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs