Tvk Vijay Karur Stampede - 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode
விஜய் செய்தது தவறான முன்னுதாரணம்: நயினாா் நாகேந்திரன்
கரூரில் நிகழ்ந்த தமிழக வெற்றிக் கழக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறாமல் விஜய் சென்னைக்குச் சென்றது தவறான முன்னுதாரணம் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூரில் த.வெ.க. தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் முழு தகவல் வெளியாகும்.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை முதல்வரின் அறிவுறுத்தல் சரியில்லை. காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. எனவே, உயிரிழப்பு சம்பவத்துக்கு முதல்வரும், தமிழக அரசு நிா்வாகமுமே காரணம்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் காவல் துறையின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு நீதியும், எதிா்கட்சிகளுக்கு அநீதியும் இழைக்கப்படுகின்றன. கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பங்கேற்க விஜய் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்ததை மறுக்க முடியாது.
அங்கு கூடியிருந்த மக்களுக்கு உணவு, தண்ணீா் வழங்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது தெரிந்தும் விஜய் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறாமல் சென்னைக்குத் திரும்பியது கட்சியின் தலைவா் என்ற முறையில் தவறான முன்னுதாரணம் என்றாா் அவா்.