விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் விஜய் சேதுபதி நடித்துவந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே துவங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரால் பரபரப்பு!
குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்தே படம் உருவாகியுள்ளதாம். விஜய் சேதுபதி - பாண்டிராஜ் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
