செய்திகள் :

'விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால்..!' - கனிமொழி சொல்வது என்ன?

post image

நேற்று (ஜூன் 4) திருநெல்வேலியில் நடைபெற்ற ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி.யும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழியிடம் தவெக குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “ தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவது திமுகவிற்கு சவாலாக இருக்காது. அதிமுக, தவெக இடையே சவாலாக இருக்கலாம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

நிறைய பேர் தனித்து போட்டியிடலாம் அது அவர்கள் தனிப்பட்ட முடிவு. தனித்துப் போட்டியிடுவோம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்திருப்பதற்கு வாழ்த்துகள்.

ஆனால் வெற்றி என்பது நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு தான் என்பது மக்களின் வரவேற்பை பார்க்கும் போது தெரிகிறது. திமுக கூட்டணியில் யாரை சேர்ப்பது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.

முதலமைச்சரை ஏற்றுக்கொண்டு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் நம்மோடு இணைந்து பணியாற்றலாம். அவர்களின் பக்கத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதிமுகவை யாரும் கபளிகரம் செய்ய முடியாது என இபிஎஸ் கூறியிருப்பார்.

கனிமொழி
கனிமொழி

பாஜக உடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மக்களுடைய எதிரிகள் யார்? என்பதில் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் யாரை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். மக்கள், திமுக மீது, முதலமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஓரணியில் தமிழகம் என்பதில் மக்கள் ஆர்வமாக இருப்பது வரக்கூடிய தேர்தல்களின் முடிவுகளின் அறிகுறியாக பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ராணுவம்: வானில் அச்சுறுத்தும் சீனாவின் 'செயற்கைகோள் படை' - எப்படி எதிர்கொள்ளும் இந்தியா?

Lசீனாவின் விண்வெளி ராணுவத் தொழில்நுட்பம் உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. ஆர்பிட்டில் ஆதிக்கம் செலுத்தும் ராணுவ செயற்கை கோள்களை எதிர்கொள்வது இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும்.தாக்குதல் நடத... மேலும் பார்க்க

America Party: புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க் - முழு விவரம்!

கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஆகிய இருவரும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம், 'ஒன் பிக் அண்ட் பியூ... மேலும் பார்க்க

IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Imperfect Show 5.7.2025

* சுற்றுப்பயணத்துக்கான Logo-வை வெளியிட்ட எடப்பாடி! * எடப்பாடிக்கு இன்றுமுதல் Z+ பாதுகாப்பு? * அதிமுக உட்கட்சி விசாரணை - உயர்நீதிமன்றத்தில் பதில் சொன்ன தேர்தல் ஆணையம்? * அரசுப் பணிகளில் திமுக ஐடி விங் ... மேலும் பார்க்க

`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்

மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு. இதற்கு ம... மேலும் பார்க்க

Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” - ஜான் பாண்டியன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முத... மேலும் பார்க்க