விடாமுயற்சி வசூலைக் கடந்த டிராகன்?
விடாமுயற்சி திரைப்படத்தின் வசூலை டிராகன் முறியடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற காட்சிகள், நாயகியாக அறிமுகமான கயாது லோஹர் என பல விஷயங்களும் கைகொடுத்ததால் இப்படம் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம்.
இதையும் படிக்க: இயக்குநராகும் ரவி மோகன்!
அதேநேரம், நடிகர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் பெரிய வணிக வெற்றியைப் பெறாமல் ரூ. 150 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகவல்களை ஒப்பிட்டு பார்க்கும்போது டிராகன் திரைப்படம் விடாமுயற்சி வசூலை முறியடித்திருக்கலாம் என்றே தெரிகிறது. இரண்டாவது படத்திலேயே உச்ச நட்சத்திர நடிகர் படத்துடன் பிரதீப் ரங்கநாதன் போட்டி போட்டிருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.