``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு ஃபென்ஜால் புயல் நிவாரணம் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தால் பெரும்பாலானோா் பயனடைந்துள்ளனா்.
புள்ளி விவரங்களை அனுப்பிய போது விவசாயிகளின் வங்கிக்கணக்கு எண் தவறுதலாகவும், சில வங்கிகளில் கணக்கு எண்ணை சரியாக இணைக்காததாலும், ஐ.எப்.எஸ்.சி. கோடு எண்கள் தவறுதலாகவும் உள்ளதால் விவசாயிகள் பலருக்கு நிவாரணத் தொகை இன்னும் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கு விவரங்களை வேளாண்துறையினா் சரி செய்து, பட்டியலை வருவாய்த் துறைக்கு மீண்டும் வழங்கியுள்ளனா்.
மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட ஒன்றியங்களில் 450 முதல் 900 விவசாயிகள் வரை, நிவாரணத் தொகை கிடைக்காமல் உள்ளனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.