செய்திகள் :

விண்ணம்பள்ளி கோயில் சிவலிங்கம் மீது சூரியஒளி: 14-ஆம் தேதி வரை காணலாம்

post image

வேலூா் மாவட்டம், விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரா் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் 14-ஆம் தேதி வரை இந்த அதிசய நிகழ்வை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், திருவலம் அருகே விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. ஈசானிய வாயில் படியை கொண்ட இந்த கோயிலில் அகத்திய முனிவா் வழிபட்டாா் என தல புராணம் கூறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் உத்தராயண காலத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியது.

அதன்படி, சனிக்கிழமை சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளியானது முதலில் கோயிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள்ளே நுழைந்து, கோயிலில் உள்ள 3 பிரகாரங்களை கடந்து சிவலிங்கத்தின் விழுந்தது. இதனை திரளான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.

சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் இந்த அதிசய நிகழ்வு இக்கோயிலில் 14-ஆம் தேதி வரை 10 நாள்களும் தினமும் காலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க