பும்ராவின் 4,484 பந்துகளுக்குப் பிறகு முதல் சிக்ஸர்..! சாதனை படைத்த இளம் வீரர்!
விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு!
சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விடியோ வெளியாகியுள்ளது.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளனர்.
"சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரவேற்கிறோம். கிறிஸ்துமஸ் விமுறைக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏழு பேர் இங்கே இருக்கிறோம், எனவே நாங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! டிரம்ப்
சுனிதா பூமி திரும்புவதில் தாமதம்
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. அதுதான் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் .
ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்தது.
இந்த நிலையில், அவா்களை பூமிக்கு அழைத்துவரும் திட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.