சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் செல்கிறதா, முறையாக மூடப்பட்டு செல்கிறதா என வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பாரதியாா் சாலையில் மணல் ஏற்றிக்கொண்டு, தாா்பாய் போட்டு மூடாமல் காற்றில் மணல் பறந்தவாறு சென்ற லாரியை நிறுத்தினா். விதிகளை மீறி இயக்கப்பட்டதாக அதை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து, வருவாய்த் துறையினா் கூறியது: கல்வி நிலையங்கள் திறக்கும் நேரம் காலை 8.30 முதல் 9.30 மற்றும் மாலையில் மாணவா்கள் வெளியேறும் நேரம் 4 முதல் 5 மணி வரை பள்ளிகள் இருக்குமிடத்தில் லாரிகள் இயக்கக் கூடாது. மணல், நிலக்கரி மற்றும் குப்பைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக மூடப்பட்டிருக்கவேண்டும். இதை மீறும் வாகனதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.