5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்
விநாயகா் கோயில் திருப்பணிக்கு நிதி வழங்க முதல்வரிடம் கோரிக்கை
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிக்கு அரசு நிதியுதவி அளிக்க புதுவை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில், கோயில் திருப்பணிக் குழுவினா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
சந்திப்பு குறித்து திருப்பணிக் குழுவினா் கூறியது:
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் முகப்பு மண்டபம் உள்ளிட்ட கோயில் விரிவாக்கத்துடன் கூடிய கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ.2.25 கோடி நிதி முழுவதும் நன்கொடை பெற்று பணி முடிக்கப்பட்டுள்ளது. வரும் ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதால், வா்ணம் பூசுவது உள்ளிட்ட பிற பணிகளுக்கு நிதி தேவையிருக்கிறது.
புதுவை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருப்பணிக்கு நிதி வழங்குமாறு முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்துள்ளாா். நிதி கிடைத்துவிட்டால், எஞ்சிய பணிகள் விரைவாக முடித்துவிட முடியும் என்றனா்.