பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன...
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் அலங்காநல்லூா் சென்று விட்டு, மதுரைக்குத் திரும்பினாா்.
குலமங்கலம் சாலையில் லட்சுமிபுரம் அருகே வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.